தமிழக அரசு அனுமதி! செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
DMK Senthilbalaji Case Special Court Order
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றச்சாட்டு பதிவுக்காக வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை நடத்த தமிழக அரசின் அனுமதி உத்தரவை காவல்துறை தற்போது தாக்கல் தாக்கல் செய்துள்ளது.
இதனை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீதான வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், அவருக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தால் தமிழக அமைச்சரவையில் மாற்றம், உதயநிதிக்கு துணை முதலமைச்சராகவும், செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராகவும் பதவி ஏற்பார் என்றும் சொல்லப்படுகிறது.
English Summary
DMK Senthilbalaji Case Special Court Order