தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தை கரூர் மாவட்ட ஆட்சியர்!
Karur Thamil Puthalvan Scheme
தமிழ்நாடு முதலமைச்சர் கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தையொட்டி, கரூர் மாவட்ட மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோயமுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வரலாற்று சிறப்புமிக்க தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்ததையொட்டி, கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் அவர்கள் இன்று (09.08.2024) மாணவர்களுக்கு மாதாந்தோறும் ரூ.1000-ம் பெறுவதற்கு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), திரு.ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), திருமதி க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் திருமதி வெ.கவிதா ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
அந்த வகையில் இன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த 35 கல்லூரிகளைச் சேர்ந்த 3,949 தகுதி பெற்ற மாணவர்கள் முதல் கட்டமாக இத்திட்த்தில் பயன்பெறுகிறார்கள்.
13 கல்லூரிகளில் பயிலும் 350 மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1.000 உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. அதற்க்கான பரிவர்த்தனை செய்வதற்கு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மீ.தங்கவேல்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திரு சரவணன், மண்டல தலைவர் திரு.எஸ். பி.கனகராஜ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.பிரகாசம், சமூக நலன் மற்றும் மகளிர் மகளிர் உரிமை துறை மாவட்ட அலுவலர்(பொ) திருமதி ம.வினோதினி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி மண்டல மேலாளர் திரு.மாரி செல்வம், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் திரு.வசந்தகுமார், கல்லூரி முதல்வர் திரு.அலெக்சாண்டர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Karur Thamil Puthalvan Scheme