கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நாளை தொடக்கம்.. பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தான் கட்சத்தீவு.  ராமேஸ்வரம் தீவில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்தியா - இலங்கை நாட்டை சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் திருவிழா நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (மார்ச் மாதம் 3 ) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 4) தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்தியாவில் இருந்து 2,408 பேர் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்காக மத்திய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கச்சத்தீவு வருவோர் மதுபானங்களை எடுத்து வரவோ, மது அருந்தி விட்டு வரவவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், புகைப்பிடிக்கவோ, பிளாஸ்டிக் போன்ற பாலித்தீன் பைகளை கொண்டு வர அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Katchathevu Anthoniyar festival strict rules to devotees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->