திடக்கழிவு மேலாண்மையில் மின் உற்பத்தி! தனி நபர் மசோதாவை தாக்கல் செய்தார் எம்.பி. கதிர் ஆனந்த்.!
Kathie An and Solid waste management
திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து மின்சாரம் உற்பத்தி செய்ய ஏதுவாக தனிநபர் மசோதாவை வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நகர்ப்புறங்களில் குப்பைக் கூளங்களாக சேர்ந்திடும் திடக்கழிவுகளை பிரித்து மறுசுழற்சி செய்து மின் உற்பத்தி செய்திட நடவடிக்கை எடுக்க வகையில் இந்த தனி நபர் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக எம்.பி. கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
திடக்கழிவிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் ஆலைகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய திடக் கழிவுகளை மின்சார உற்பத்தி செய்திடும் வகையிலும், மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை நிலப்பரப்புகளுக்கு கொண்டு சென்று அதனுடன் தொடர்புடையவைகளுக்காக திடக்கழிவு மேலாண்மை, 2022 என்ற தனிநபர் மசோதாவை எம் பி. கதிர் ஆனந்த் மக்களவையில் அறிமுகப்படுத்தினர்.
English Summary
Kathie An and Solid waste management