நிச்சயமான துணை நடிகையுடன் காதல்.! துணை நடிகரை கடத்திச் சென்று பெண் வீட்டார் செய்த கொடூர சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


திருமண நிச்சயமான துணை நடிகையை காதலித்த சினிமா துணை நடிகரை காரில் கடத்திச்சென்று பெண் வீட்டார் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (25). சினிமாவில் துணை நடிகையான இவர் பூந்தமல்லியில் உள்ள அவரது அக்கா மோனி வீட்டில் தங்கியுள்ளார். மேலும் ஆர்த்திக்கு கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு ஜெகன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் ஆர்த்திக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சினிமா துணை நடிகர் முத்துபிரசாத்தை(26) காதலுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து ஆர்த்தியின் காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் ஆர்த்தியின் குடும்பத்தினர் முத்து பிரசாத்தை பேச அழைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஆர்த்தியின் குடும்பத்தினர் கூறிய இடத்திற்கு வந்த முத்துபிரசாத்தை, காரில் கடத்திச் சென்று ஆர்தியின் அக்கா கணவர் பிரதாப், ஜெகன் ஆகியோர் பெண்ணலூர்பேட்டை வனப்பகுதியில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், முத்து பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kidnapped the supporting actor and attacked in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->