என்னது... கத்தி அந்தரத்தில் நிற்கிறதா! குருதி தான் காணிக்கை! வித்தியாசமாக வழிப்படும் மக்கள்!
knife standing in the gap Different people who worship by donating blood
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், எல்லார்ப் பாளையத்தில் உள்ள கொம்பு செட்டிபாளையம் சேர்ந்த தெலுங்கு தேவாங்க செட்டியார் மக்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருவதால், குலதெய்வம் எனப்படும் சௌனீஸ்வரி அம்மனுக்குக் கோவில் எடுத்து வழிபடுவது வழக்கமானாக உள்ளது. மேலும் ஆண்டுதோறும் சௌனீஸ்வரி அம்மனுக்குத் திருவிழா நடத்துவதும் வழக்கமான ஒன்றாகும். எங்கெல்லாம் இவர்களின் தெலுங்கு தேவாங்க செட்டியார்க் குளம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்நிகழ்ச்சியானது பண்டிகையாக நடத்தி வருகின்றன . இது போன்ற பண்டிகைச் செய்வதில் அக்குல மக்களுக்குப் பெரிதும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
குலதெய்வமான சௌனீஸ்வரி:
பல நூறு ஆண்டுகளாக அவர்களின் முன்னோர்கள் கூறியது போல இன்றும் நடைமுறைப்படுத்தி அதனை முழுமையாக நடத்தி வருகின்றனர். இந்த வழிப்பாடானது முன்னோர்களை நினைவு கூறும் வகையிலும் இருந்து வருகின்றன. மேலும் இந்தப் பண்டிகையானது மிக முற்றிலுமாக வித்தியாசமாக இருக்கிறது. இந்த மக்களின் குலதெய்வமான சௌனீஸ்வரி அம்மனுக்கு இவர்கள் ரத்தத்தால் காணிக்கைச் செலுத்துகின்றனர்.
இதனைக் கேட்போருக்கு அதிர்ச்சியே அளிக்கும். இருப்பினும் இது பல காலமாக நிகழ்ந்து வரும் ஒரு சடங்காகும். இம்மக்கள் ரத்தத்தை மார்பகத்திலும் தோள்களிலும் அம்மனின் கத்தியால் அறுத்துக்கொண்டு அக்கத்தியை அம்மனிடம் சமர்ப்பிக்கின்றனர். ரத்த காணிக்கையான இப்பண்டிகையை இவர்கள் முன்னோர்கள், தாத்தாக்கள், அப்பாக்கள், இவர்கள், இவர்களின் பிள்ளைகள் எனத் தலைமுறை தலைமுறையாகக் கடைபிடித்து வருகிறார்கள்.
வீர குமாரர்கள்:
இப்பண்டையானது காலையில் கரகத்தின் மூலம் தொடங்கி ஊர்களில்,தெருக்கல் தோறும் பயணம் செய்து அங்குள்ள கோயில்களுக்குச் சென்ற பின்னர், கரகத்தைக் கொண்டு வந்து "வீர குமாரர்கள் "எனப்படும் அச்சமுகத்தை சார்ந்த ஆண்களுக்கு, கத்திகளால் உடலை துன்புறுத்திக்கொண்டு அம்பாலை அங்கு கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் வழிபடும் சௌனீஸ்வரி அம்பாள் தண்ணீரிலிருந்து எழுந்து வருவதாக அவர்கள் நம்புகின்றனர்.

குல மக்கள்:
இதைத்தொடர்ந்து எங்கும் காணப்படாத நிகழ்வு ஒன்றினை அவர்கள் காண்பிக்கின்றனர். அதில் கத்தியானது எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது. அதனை மக்கள் வியப்புடனும், பக்தியுடனும் வணங்கி வருகின்றனர். அக்கத்தியினைப் பூஜை செய்தும் வழிபடுகின்றன.
மேலும் அம்பாளின் கத்தியால் தனது உடலைப் பாதித்துக் கொள்வதால், அம்பாளே தன்னிடம் வந்து தனக்கு ஆசீர்வாதம் கொடுப்பது போல் நம்புகின்றனர் அக்குல மக்கள்.
கத்தியை அம்மனாகப் பாவிக்கின்றன:
அந்தக் கத்தியை அம்பலாக ,கண்,மூக்கு, வாய்,உடல் என உருவமாகப் பாவித்து, அந்தக் கத்தியின் முனியானது புதிதாகச் செய்யப்பட்ட பானையில் "அழகு தீர்த்தம்" எனப்படும், கங்கா காவேரி ,கிருஷ்ணா, நர்மதா, தபதி என்ற தீர்த்தத்தில் நிற்கும். எந்தவிதப் பிடிப்பும் இல்லாமல் இக்கத்தியானது தண்ணி மேல் நிற்பதால் அக்குல மக்கள் கத்தியை அம்மனாகப் பாவிக்கின்றனர். கத்தியானது மதியம் 1 மணிக்கு நிற்கத் தொடங்கி இரவு சாமி தரிசனம் கிடைக்கும் வரை நின்று கொண்டே இருக்கும் எனத் தெரிவிக்கின்றன. அதன் பின்னர்க் கத்தியானது இறங்கப்படும் என்றனர்த் தேவாங்க செட்டியார்க் குலமக்கள்.
தெலுங்கு தேவாங்க செட்டியார்:
இதனைச் சேலம் மாவட்டம் கழகப்பட்டியில் இருந்து வீரக்குமாரர்கள் அங்கு வந்து தங்கிஇருந்து இந்த விழாவிற்கு உறுதுணையாக நின்று வருடம் தோறும் சிறப்பித்துத் தருகிறார்கள் எனத் தெரிவித்தனர். மேலும் கோட்றாங்கத்திலிருந்து தேவாங்க சமூகத்தைச் சார்ந்தவர்களும் வந்து இந்த ஒரு நாள் தங்கி இருந்து ஒன்றுக்கூடி அனைவரும் சேர்ந்து இப்பண்டிகையைச் சிறப்பித்து வழிபடுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
English Summary
knife standing in the gap Different people who worship by donating blood