கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் திடீர் உயர்வு! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்.!
kodaikanal flower show entry fee increase
கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நாளை தொடங்க உள்ளது நாளை முதல் வருகின்ற 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
கொடைக்கானலில் நடைபெறும் இந்த விழாவில் தோட்ட கலைத்துறை மூலமாக மலர் கண்காட்சியும் சுற்றுச்சூழல் சுற்றுலாத்துறை மூலமாக கோடை விழாவும் நடத்தப்படவுள்ளது.
இந்த விழாவில் 10 நாட்களுக்கு பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல், நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியின் நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.15 ல் இருந்து ரூ. 35 ஆகவும் பெரியவர்களுக்கு ரூ. 75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டணம் 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் மட்டும் அமலில் இருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
kodaikanal flower show entry fee increase