கொடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.! - Seithipunal
Seithipunal


நீலகிரி, கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான ஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொலை சம்பவம் நடைபெற்றது. 

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர். இது குறித்த வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

இந்த விசாரணையின் போது வடநாட்டில் நடந்த புலன் விசாரணை குறித்து எந்த ஒரு அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kodanadu case adjourned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->