10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை! கோவையில் பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


கோவையில் கடந்த 2015ல் பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க்கப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி, கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கான், சுரேஷ், பிரகாஷ், நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கிறிஸ்டோபர், கருப்பு கௌதம் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கும், பின்னணியும்:

கடந்த 2015 ஆம் ஆண்டு கோவையில் கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலில் பட்டியலின இளைஞர் தாமரைக் கண்ணன் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் 14 பேர் கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கு கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் அணைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இன்று கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மொத்தம் இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரில் 10 பேருக்கு இரட்டை  ஆயுள், 2 பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai 2015 murder case judgement


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->