கோவை தீ வைப்பு சம்பவம்! பாஜக, இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கைது!
Kovai BJP And Hindu Munnani members arrested
கோவை : அலுவலக தீ வைப்பு சம்பவத்தில் இந்து முன்னணி மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, சுங்கம் பைபாஸ் சாலையில் நடந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி மற்றும் பாஜகவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 17ஆம் தேதி சுங்கம் பைபாஸ் சாலையில் சிக்கந்தர் என்பவரின் அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், சூதாட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த தீ வைப்பு சம்பவம் நடந்திருப்பது உறுதியானது.
முதல்கட்டமாக உஸ்மான் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி அயோத்திய ரவி, பாஜகவை சேர்ந்த ரமேஷ், சசிதரன் ஆகிய 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
English Summary
Kovai BJP And Hindu Munnani members arrested