#கோவை | கொள்ளையடித்த திருடனை விட பாஜக பிரமுகர் போட்ட திருட்டு தில்லாலங்கடி அம்பலம்! - Seithipunal
Seithipunal


கடந்த மே 18ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம்,  அன்னூர் சொக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளை போனது.

இது குறித்து விஜயகுமார் அளித்த புகாரில், தனது வீட்டில் இருந்த ஒன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கபட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்கு இடமான ஒரு நபர் சென்று வந்தது தெரிய வரவே, அவரை கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் சிறப்பு விசாரணையை மேற்கொண்டனர். 

விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 33 வயது உடைய அன்பரசன் என்பதும், அவர்தான் விஜயகுமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்டதும் உறுதியானது. மேலும் விஜயகுமார் வீட்டில் 18.50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் மற்றும் 9 சவரன் தங்க நகைகளை மட்டுமே அவர் திருடியதாகவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

ஆனால் விஜயகுமார் தனது வீட்டில் ஒன்றரை கோடி ரூபாய் திருடப்பட்டதாக புகார் அளித்திருந்ததால், அவரிடமும் போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் விஜயகுமார் குற்றவாளியை விரைவாக பிடிக்க காவல்துறைக்கு அழுத்தம் தர, இப்படி பொய்யான ஒரு புகாரை கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குற்றவாளி அன்பரசன் இடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து விஜயகுமாரிடம் ஒப்படைத்த போலீசார், அன்பரசனை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் பொய்யான தகவல்களை கூறி போலீசாரை அலைக்கழித்ததாக பாஜக பிரமுகர் விஜயகுமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் தரப்பில் மேலும் தெரிவிக்கையில், போலீசாரிடம் உண்மையான தகவல்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் விசாரணையை சரியாக செய்ய முடியும். தவறான தகவலை தெரிவித்தால் அது விசாரணையை பாதிக்கும். இனி இது போல் யாரும் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai Mettupalaiyam robbery case


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->