கோவையில் பெரும் சோகம்! ஆழியார் ஆற்றில் மூழ்கி மூன்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலி!
kovai students death
கோவை மாவட்டம் ஆழியார் ஆற்றில் குளித்தபோது மூழ்கி, சென்னைச் சேர்ந்த மூன்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதிக் ஆண்டில் பயின்று வந்த மாணவர்கள், சுற்றுலாவாக கோவைக்கு வந்திருந்தனர். இந்த சுற்றுலாவின் ஒரு பகுதியாக, அவர்கள் ஆழியார் ஆற்றுக்கு சென்ற போது, குளிக்க நீருக்குள் இறங்கினர்.
அப்போது ஏற்பட்ட திடீர் நீரின் அழுத்தம் மற்றும் ஆற்றின் ஆழம் காரணமாக, மாணவர்கள் மூழ்கத் தொடங்கினர். அருகிலிருந்த நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அந்த முயற்சியில் வெற்றி பெற முடியாமல், தருண், ரேவந்த் மற்றும் ஆண்டோ ஜெனிப் என்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
உடனடியாக தகவல் பெற்ற போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த துயர சம்பவம் மாணவர்களின் குடும்பத்தினரிடமும், கல்வி நிறுவனத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த விபரீத சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.