ஊரேகெட்டுக்கடக்கு.. கோவையில் பள்ளி மாணவிகளுக்கு அரசுபேருந்து நடத்துனரால் ஏற்ப்பட்ட அசம்பாவிதம்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரிய புத்தருக்கு 8A என்ற பேருந்து தேக்கம்பட்டி வழியாக செல்கிறது. இதற்கிடையில் உள்ள கிராமங்களில் கிராமங்களின் பல்வேறு பகுதிகளில் நிறைய அரசு பள்ளி மாணவர்கள் இருக்கின்றனர். 

அவர்கள் பள்ளிக்குச் செல்ல இந்த பேருந்தை தான் பயன்படுத்தி வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த பேருந்தை பயன்படுத்தி வரும் நிலையில் சரியான நேரத்திற்கு பேருந்து வருவதில்லை என்றும் அப்படி வந்தாலும் மாணவர்களைக் கண்டால் நிற்காமல் சென்று விடுகிறது என்றும் கூறப்படுகிறது. 

நேற்று மாலை பள்ளி முடிந்து மஹாதேவபுரம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்பொழுது மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கூட்டம் அதிகமாக இருந்ததால் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளை இறக்கி விட்டு சென்றுள்ளது. பின்னர் அங்கிருந்து மாணவிகள் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தனர். தாமதமாக வீட்டிற்கு வந்ததால் பெற்றோர்கள் பதற்றமடைந்து இது குறித்து விசாரித்தனர்.

அப்போது பேருந்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர்கள் தெரிவிக்க இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அந்தப் பேருந்தை சிறைபிடித்தனர். நடத்துனர் மற்றும் ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் விரைந்து வந்து சுமுகமாகப் பேசி பிரச்சனையை முடித்து வைத்தனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை இலவசமாக பயணிக்கிறார்கள் என்று பல நடத்துநர்கள் இதுபோல இழிவாக நடத்துவது உண்டு. 

இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். பல அசம்பாவிதங்கள் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் நிலையில் மாணவிகளை இரவு நேரத்தில் இப்படி ஒரு பெற்ற நிலையில் இறக்கி விட்டுச் செல்வது எப்படி நியாயமாகும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kovai students insults by conductor


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->