சென்னைக்கு ஐம்பொன் சிலைகளை கடத்திய 2 பேர்.. அலேக்காக ஒருவரை அள்ளிய போலீசார்.!  - Seithipunal
Seithipunal


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருவர் உறங்கிக் கொண்டிருந்தபோது போலீசார் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு எழுப்பி விசாரித்தனர். அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மற்றொருவரை போலீசார் பிடித்து அவரிடம் இருந்த பையை பறிமுதல் செய்து பார்த்தனர். 

அதில் முக்கால் அடி உயரம் கொண்ட பொன்மணி விளக்கு ஏந்திய ஒரு சிலை மற்றும் மூன்று அங்குலம் கொண்ட சிறிய பெருமாள் சிலை உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

இதில் தப்பியோடியவர் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (30 வயது) பிடிபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது சுதாகர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் லால்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் தூதுவர்களாக சென்னைக்கு வந்தது தெரியவந்துள்ளது. 

இந்த சிலைகளை கொடுத்து பழைய 20 ரூபாய் நோட்டு மற்றும் ஒரு துண்டு சீட்டை சென்னையில் இருக்கும் ஒரு நபரிடம் இவற்றை கொடுத்தால் அவர் மூன்று லட்சம் தருவார் என்றும் அதை வாங்கி வருமாறு அனுப்பி வைத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியுடைய நபர் மற்றும் திருச்சியை சேர்ந்த பெண்மணி பற்றிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

koyambedu police arrested statue from trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->