கிருஷ்ணகிரி சம்பவத்தின் எதிரொலி, தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


பெற்றோர், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி முகாம் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்த தனியார் பள்ளிகள் இயக்குநரகம் விடுத்துள்ள சுற்றைக்கையில், "தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும் , மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும்.

அனுமதியின்றி முகாம் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது.

மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலம், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலம் பயிற்சிகள் வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமனுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 2ஆம் தேதி வரை சிவராமனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிபதி உத்தரவை தொடர்ந்து சிவராமனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். விரைவில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Incident Private Schools Tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->