கிருஷ்ணகிரி: பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத்தொகை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Krishnagiri School girls Abuse case
கிருஷ்ணகிரி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத்தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் இந்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து உள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத்தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட 23 மாணவிகளில் இருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மீதமுள்ள மாணவி மீதமுள்ள 21 மாணவிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த கருணைத்தொகையை சம்பத்தப்பட்ட பள்ளிகளிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
Krishnagiri School girls Abuse case