கிருஷ்ணகிரி | முஸ்லீம் சிறுவன் கொடூர முறையில் கொலை! சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் மது போதையில் 14 வயது சிறுவனை தாக்கி அவர் மீது வாகனம் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி: பாஞ்சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர் இர்பான் (வயது 14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடை வழியாக சென்றுள்ளார். 

அப்போது மது போதையில் இருந்த ஒரு நபர் இர்பானிடம் சிகரெட் வாங்கி வருமாறு கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் சிறுவனை தாக்கி கீழே தள்ளி இருசக்கர வாகனத்தை ஏற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். 

ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக சிறுவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி, அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnangiri boy killed relatives involved road blockade


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->