கிருஷ்ணகிரி | சிலிண்டர் வெடித்து 9 பேர் பலி! மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏக்கள் நேரில் ஆய்வு!
Krishnangiri cylinder exploded 9 people died Collector MLAs inspected
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 4 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்:
கிருஷ்ணகிரி: பழைய பேட்டை நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில், அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் வைத்து நடத்தி வந்தார்.
அந்த கடைக்கு அருகிலேயே ராஜேஸ்வரி என்பவர் உணவகம் வைத்து நடத்தி வந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து, அந்த தீ பட்டாசு கடைக்கு பரவியுள்ளது.
இந்த விபத்தில் ராஜேஸ்வரி (வயது 55), பட்டாசு கடைக்காரர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ருத்திகா, மகன் ருதீஷ் உள்பட 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
பட்டாசு கடையில் இருந்தவர்கள் உடல் அங்குமிங்கும் சிதறி கிடைப்பதால், காண்போர் மனங்களை உலுக்குவதாக அமைந்தது. இந்த விபத்து ஏற்படும் போது ஓட்டலில் 4 பேர் இருந்ததாகவும் அவர்களது நிலை என்னவென்று தெரியவில்லை.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர், திமுக எம்எல்ஏ மதியழகன், அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், "உணவகத்தில் சிலிண்டர் வெடித்து பட்டாசு கடைக்கும் தீ பரவியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை முழுமையாக அணைத்து, பின்னர் இன்னும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா, உயிரிழப்பு இருக்கிறதா போன்ற தகவல்கள் தெரியவரும்" என்றார்.
இந்த விபந்து நடத்த இடத்துக்கு அருகில் இருந்த வீடுகளில் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் விபத்து நடந்தபோது சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றோர், நடந்து சென்றோர் மீது கட்டிட இடிபாடுகள் சிதறி விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது.
English Summary
Krishnangiri cylinder exploded 9 people died Collector MLAs inspected