கும்பகோணத்தில் 4 பேருடன் ரயில் மறியலில் ஈடுபட்ட கேஎஸ் அழகிரி!
KS Alagiri Protest in kumbakonam for RahulGandhi case judgement
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதாக கூறி, பிரதமர் பெயரின் பின்னால் உள்ள சமூகத்தின் பெயரை குறிக்கும் 'மோடி' என்ற சொல்லை பயன்படுத்தி, மோடி என்றால் திருடர்கள் என்கின்ற கண்ணோட்டத்தோடு பேசியதாக பாஜக எம்எல்ஏ ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், ராகுல்காந்தி ஒரு சமூகத்தை அவமதிக்கும் வகையில் பேசியது உறுதியானது என்று அவர் குற்றவாளி என்றும் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியும் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய கால அவகாசம் தர ஏதுவாக அவருக்கு ஜாமின் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சற்றுமுன் தமிழக சட்டப்பேரவையிலிருந்து வெளியே வந்த காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள், ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கும்பகோணம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ஆதரவாளர்கள் நான்கு பேருடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
English Summary
KS Alagiri Protest in kumbakonam for RahulGandhi case judgement