கும்பகோணம் ரவுடி கொலை வழக்கில் திருப்பம்: தற்காப்புக்காக கட்டையால் அடித்த அண்ணன்!
Kumbakonam Rowdy death case
கும்பகோணத்தில் ரௌடி காளிதாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி பகுதியில் வசித்து வந்த காளிதாஸ் (35), இன்று அதிகாலை தன் வீட்டின் முன்பே மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கொலைக்குப் பின் அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உதவி காவல் கண்காணிப்பாளர் விரைந்தார். உடல் கைப்பற்றப்பட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
காளிதாஸின் மீது பல்வேறு குற்றவாளித் தனம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததால், முன்விரோதமா? சொத்து தகராறா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்தவர் யார்?
விசாரணையின் போது, காளிதாஸின் சகோதரர் பாண்டியன் மீது சந்தேகம் எழுந்தது. முதற்கட்ட விசாரணையில், கொலைக்குப் பாண்டியனே பொறுப்பானவர் என்பதும் உறுதியானது.
கொலையின் பின்னணி:
குடிபோதையில் இருந்த காளிதாஸ், தனது குடும்பத்தை கவனிக்கவில்லை. இதை கண்டித்த பாண்டியன், சகோதரருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றி, தற்காப்புக்காக மரக்கட்டையை எடுத்து பாண்டியன், காளிதாஸின் தலையில் தாக்கியுள்ளார். இதில் காளிதாஸ் உயிரிழந்துள்ளார்.
கொலை குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து, பாண்டியன் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Kumbakonam Rowdy death case