தக்க பாடம் புகட்டுவோம் - நிதியமைச்சருக்கு எம்.பி கனிமொழி பதிலடி.!
mp kanimozhi tweet about union minister nirmala seetharaman
சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழகத்தில் இருந்து வரிப்பணம் அதிகம் தருகிறோம். ஒரு ரூபாய் தந்தால், 7 பைசா தான் திரும்புகிறது என்கின்றனர். மற்ற சலுகைகள் எல்லாம் எங்கிருந்து வருகிறது. அனைத்துக்கும் முக்கியத்துவம் தந்து வருகிறோம். ஜனரஞ்சகமாக இவர்கள் விவாதிப்பதே தப்பு என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:- "நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?
தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்றுத் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
mp kanimozhi tweet about union minister nirmala seetharaman