திமுக சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் பங்கேற்ப்பு!
DMKs fasting ceremony Theni MP ThangaTamilselvan participates
பெரியகுளத்தில் திமுக சார்பில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க. தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பெரியகுளத்தில் நகர திமுக மற்றும் வடக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் திமுக நகர் கழக அவைத்தலைவர் டி .வெங்கடாசலம் தலைமை தாங்கினார் சிறுபான்மை பிரிவுமாவட்ட அமைப்பாளர் எம். கே. ஷேக் அப்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். திமுக பெரியகுளம் நகர செயலாளர் கே. முகமது இலியாஸ் விழாவை தொகுத்து வழங்கி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்
இந்த நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க. தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதாசிவக்குமார் . மாவட்ட திமுக அவைத்தலைவர் பி.டி செல்லபாண்டியன் . திமுக நகர துணைச்செயலாளர் சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த தோழமை நிர்வாகிகளும் இஸ்லாமியர்களும் திரளாக வருகை தந்து இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.இறுதியாக திமுக நகர துணைச் செயலாளர் மு.சேதுராமன் நன்றி கூறினார்.
English Summary
DMKs fasting ceremony Theni MP ThangaTamilselvan participates