#கும்பகோணம் || சொகுசு காரின் பின்புற சீட்டில் மர்ம நபர் செய்த வேலை.! வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.!
kumbakonam sarankapani temple street robbery cctv
கும்பகோணம் : சொகுசு காரில் வைக்கப்பட்டு இருந்த கைப்பையை நூதன முறையில், மர்மநபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சரத் என்பவர் தனது குடும்பத்தினருடன் கும்பகோணத்தில் உள்ள கோவில்களை தரிசனம் செய்ய வந்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/gaersghj.png)
அதன்படி, பல கோவில்களில் தரிசனம் செய்த அவர், சாரங்கபாணி சுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக தனது காரை கீழ வீதி பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தனது வாகனத்தின் மீது உங்கள் கார் மோதி விட்டதாக சரத் இடம் தகராறு செய்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/bvsdrbhsrdn.png)
அதே நேரம், தகராறு செய்தவர் உடன் வந்த மற்றொரு நபர், காரின் பின் கதவை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கைப்பையை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த கைப்பையில் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை இருந்ததாக பாதிக்கப்பட்ட சரத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/xvsaegerh.png)
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
kumbakonam sarankapani temple street robbery cctv