பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்... குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!  - Seithipunal
Seithipunal


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக குற்றாலத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு அடிக்கடி மிதமான மழை, குளிர்ந்த காற்று என நிலவுகிறது. 

தொடர் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை நாட்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது குற்றாலம் பேரருவியின் மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டது. 

ஐந்தருவியிலும் கூட்ட நெரிசல் இல்லாமல் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர் கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஐந்தருவி, பழைய அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kurdala waterfalls ban both


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->