சுற்றுலா பயணிகளே ரெடியா..குற்றால அருவியில் இன்று முதல் குளிக்கலாம்!! - Seithipunal
Seithipunal


குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்த நிலையில் 7 நாட்களுக்குப் பின் இன்று அருவியில் குளிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 17ஆம் தேதி குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பருக்கு 15 வயதான அஸ்வின் என்ற இளைஞன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் அவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிதம்பரத்தில் கொள்ளு பேரன் என்பது தெரியவந்தது.

 தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதிய காற்றை இது தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. நாளை காட்டெழுத்து தாயும் மண்டலம் வலுவை இழந்து புயலாக மாறும் என்று வானிலை ஆராய்ச்சி முகம் தகவல் தெரிவித்துள்ளது. புயலுக்கு ரிமல் என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி மாலை பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவி, பழைய குற்றாம்,ஐந்தறிவி போன்ற அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில், ஏழு நாட்களுக்குப் பிறகு இன்று அந்த தடையை நீக்கி உள்ளது. இன்று மாலை 4 மணியிலிருந்து அருகில் குளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kutralam waterfalls tourist bathing allowed today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->