மனநலம் பாதித்த சிறுமிக்கு நடந்த கொடுமை… தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை... நீதிமன்றம் அதிரடி..! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருப்பசாமி (44). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கருப்பசாமியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கருப்பசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 2.50 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer gets life sentence for rape mentally challenged girl in Pudukkottai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->