நிலமோசடி வழக்கு! அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமறைவு! கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்! - Seithipunal
Seithipunal


கரூர் : நிலமோசடி வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகாவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையத்தில் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட நிலமோசடி வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டுள்ளது. இதனால் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் எம்.ஆர் விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தநிலையில், முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வட மாநிலத்திற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Land grabbing case Former AIADMK minister MR Vijayabhaskar absconding


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->