ரூ.6000..இல்ல ரூ.4000! நில அசல் ஆவணம் தர லஞ்சம்! மாறுவேடத்தில் சென்று அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார்! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை அருகே  நில உரிமையாளரிடம் அசல் ஆவணம் தர ரூ. 4000 லஞ்சம் வாங்கிய சிறப்பு தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக லஞ்சம் வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனி பட்டா வழங்க ஐந்தாயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். அதன்பின்னர் முதல் தவணையாக  2000 வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விஎஒ பால் பாண்டியன் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கோட்டை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு சொந்தமான நிலம் சோளிங்கர் பகுதியில் 1913 சதுர மீட்டர் நிலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திண்டிவனம் நகரி ரயில் பாதை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ரயில் பாதை அமைய உள்ளதால் நிலத்திற்கு இழப்பீட்டுதொகை பெறுவதற்காக அனைத்து அசல் ஆவணங்களையும் கோவிந்தராஜ் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி அவருக்கு இழப்பீட்டுத்தொகை ரூ. 6,27,080 வழங்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கோவிந்தராஜ் அசல் ஆவணங்களை திரும்ப பெற சென்ற போது சிறப்பு வட்டாட்சியர் மதிவாணன், 1 சதவீதம்  ரூ. 6000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. பேரம் பேசியதில்  ரூ. 4 ஆயிரம் கொடுக்குமாறு சிறப்பு தாசில்தார் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் கொடுத்த ரகசிய ரசாயன தடவிய ரூ. 4000 பணத்தை ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நிலை எடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் மதிவாணையிடம் வழங்கி உள்ளார்.

அப்போது கோவிந்தராஜ் உடன் மாறுவேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் அது சிறப்பு தாசில்தார் மதிவாணனை கைது செய்தனர். மேலும் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.8000 பணம் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Land owner near Ranipet to give original document Special tahsildar arrested for taking 4000 bribe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->