#BREAKING | 10 மடங்கு மின் கட்டணம் வசூல் செய்யுங்க - முக்கிய வழக்கில் சென்னை உய்ரநீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டிய கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு, வீட்டை காலி செய்யும்படி ஆவடி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீசை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், நிலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் உள்ளதா? என அறிக்கைகள் தாக்கல் செய்ய ஆவடி தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

மேலும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு பத்து மடங்கு மின்சார கட்டணம் வசூல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும் ஒரு முக்கிய அண்மைய செய்தி :

சமூக வலைத்தளங்களில் தமிழக காவல்துறை எருது விடுதல், கம்பலா உள்ளிட்ட போட்டிகளுக்கு தடை விதித்துள்ளதாக தகவல் பரவிய நிலையில், ஜல்லிக்கட்டு, கம்பள, கம்பளா எருது விடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு எந்த விதமான தடையும் விதிக்கவில்லை என்று, தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது போன்ற தவறான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Land Scam Case Chennai HC Order 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->