பரபரப்பு! மலை பாதையில் மண் சரிவு! போக்குவரத்து பாதிப்பு!
Landslides on Anthiyur to Barkur hill road affecting traffic
அந்தியூர்-பர்கூர் மலை பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. கனமழையால் சேலம் பொன்னி அம்மன் கோவிலில் இருந்து எண்ணமங்கலம் செல்லும் பாதையில் பாலம் காற்றாண்டு ஓடை நீரால் ஏற்கனவே உடைந்து இருந்த நிலையில் இருசக்கர வாகனம் மற்றும் செல்லும் அளவிற்கு இருந்த பாலும் முட்டிலமாக சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை காரணமாக அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனம் தமிழகத்தில் இருந்து கன்னடத்தில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையாக நின்று கொண்டிருப்பதால் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் சாலையில் உள்ள மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலை துறையின் பர்கூர் காவல்நிலையத்துறையினர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன மழை காரணமாக கர்நாடகாவிற்கு செல்லும் அந்தியூர்-பர்கூர் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Landslides on Anthiyur to Barkur hill road affecting traffic