அட கடவுளே! 3 குழந்தைக்கு தந்தை,மனைவி கர்ப்பம்! கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது! - Seithipunal
Seithipunal


மூன்று குழந்தைகள் கர்ப்பிணி மனைவியாக  இருந்தநிலையில் மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சட்டக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கோட்டரமடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். அது மட்டுமில்லாமல் அவரது மனைவி தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகுமாருக்கு பள்ளி கொண்டா  அருகே உள்ள அரசு கல்லூரியில் பயிலும் மாணவிக்கும் மேற்பட்ட நட்பு ஒரு கட்டத்தை காதலாக மாறியுள்ளது. விஜயகுமார் திருமணம் ஆனதை மறைத்து விஜயகுமார் மாணவியுடன் காதல் செய்து வந்துள்ளார்.

மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மாணவி வீட்டில் வயிற்று வலி என்று அழுதுக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்ததை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து கர்ப்பத்திற்கு காரணமான விஜயகுமாரை தேடி அவரது ஊருக்கு அவரது பெற்றோர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

சட்டக்கல்லூரி மாணவனுக்கு  ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் மற்றும் மனைவி கர்ப்பமாக இருப்பது கண்டு மேலும் மாணவியின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை தலைமறைவாக இருந்த சட்ட கல்லூரி மாணவரை நேற்று கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

law college student who fell in love with a student while his wife was pregnant with three children was arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->