8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்.!
lesson of karunanithi in 8th class book
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் "பன்முகக் கலைஞர்" என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் ஐந்து பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் குறித்து இடம் பெற்றுள்ளது.
English Summary
lesson of karunanithi in 8th class book