''மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பின்பற்றுவோம்'' இப்தார் நோன்பு திறப்பில் த.வெ.க தலைவர் விஜய்..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இன்று (மார்ச் 7ம் தேதி) இப்தார் நோன்பு திறந்தார்.

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் இப்தார் நோன்பு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த இப்தார் நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 05 இஸ்லாமிய நிர்வாகிகள் பங்கேற்க கட்சியின் சார்பில் அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு திறப்பதற்காக நடிகர் விஜய் இன்று மாலை 5.20 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ., அரங்கம் சென்றார். அப்போது அவர் காரில் இருந்து இறங்கும் போது, இஸ்லாமியர்கள் போன்று, கைலி, சட்டை மற்றும் குல்லா அணிந்து அசல் இஸ்லாமியர் போன்றேகாட்சி அளித்தார்.அவரை சூழ்ந்த ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்த படியே அவர் அரங்கின் உள்ளே சென்றார்.

இதன் பின்னர், நோன்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அரங்கிற்குள் சென்ற விஜய், இஸ்லாமியர்களுடன் வரிசையில் அமர்ந்ததோடு, அவர்களுடன் தொழுகை செய்துவிட்டு நோன்பு கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு ஐவரும் இப்தார் நோன்பை திறந்தார்.

இவ்வாறு அனைவரும் அங்கு நோன்பு திறந்த பின்னர், த.வெ.க., சார்பில் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. முன்னதாக, நோன்பு நிகழ்வில் கலந்து கொள்ள கட்சியின் சார்பில் பங்கேற்பவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ரசிகர்கள் விஜயை பார்க்க ஆர்வத்துடன் அரங்கினுள் முண்டியடித்துச் சென்றனர். இதனால் அரங்கின் நுழைவு வாயிலில் இருந்த பெரிய கண்ணாடி உடைந்து சிதறியமை குறிப்பிடத்தக்கது.

இந்த இப்தார் நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 3000- பேர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய், மனிதநேயம் சகோதரத்துவத்தை பின்பற்றுவொம். மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பின்பற்றுவோம்" என்று பேசினார். ஒய்.எம்.சி.ஏ-வில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி காரணமாக ராயப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Let us follow the life of the great man the Prophet Muhammad TVK leader Vijay said


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->