திமுக நிர்வாகி கொலை வழக்கு! 5 பேருக்கு ஆயுள் தண்டனை!
Life imprisonment for 5 people in DMK executive murder case Nellai court important verdict
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் இடம்பெற்ற திமுக இளைஞர் அணி அமைப்பாளர் முத்துராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த முத்துராமன், 2018-ல் வள்ளியூர் முப்பிடாதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு தனது கட்சியின் சார்பில் பதாகை வைத்திருந்தார்.
இதற்கு தெற்கு வள்ளியூரைச் சேர்ந்த தங்கவேல் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் எழுந்தது. இரு தரப்பும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2020 செப்டம்பர் 12 அன்று, முத்துராமன் தனது காரில் வீடு திரும்பும் போது, வழிமறித்த ஐந்து பேர் அரிவாளால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தீர்ப்பு இந்த வழக்கில், பணகுடி போலீஸார் தெற்கு வள்ளியூரைச் சேர்ந்த முத்துராமன், ராம்குமார், தில்லை, குணா மற்றும் தங்கவேல் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த திருநெல்வேலி முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி வி.பத்மநாபன், குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையையும், மேலும் நான்கு பேருக்கு தலா ரூ.2,500 அபராதமும், ஒருவருக்கு ரூ.2,000 அபராதமும் விதித்தார்.
இந்த வழக்கில் அரசின் தரப்பில் வழக்கறிஞர் மு.கருணாநிதி வாதாடினார்.
English Summary
Life imprisonment for 5 people in DMK executive murder case Nellai court important verdict