மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்; உச்ச நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு  ஏற்றுள்ளது. இந்த மானியத்தை பெறுவதற்காக, மின் நுகர்வோர் தங்களின் ஆதார் எண்ணை, மின் நுகர்வோர் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து, அவர்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும்படி மனுதாரரை ஏற்கனவே அறிவுறுத்தியது. அதன்படி, மனுதாரர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும், சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எம்.எல்.ரவி, இதற்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில்,  'மின் நுகர்வோர் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை, மாநில அரசு அதன் கொள்கை முடிவாக மேற்கொண்டுள்ளது. இதில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Linking Aadhaar number with electricity consumer number is mandatory


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->