மகாவீர் ஜெயந்தி : அமரர் ஊர்தியில் வைத்து மது விற்பனை செய்த கும்பல்.!
liquar bottles sale on amarurudi in trichi
மகாவீர் ஜெயந்தி : அமரர் ஊர்தியில் வைத்து மது விற்பனை செய்த கும்பல்.!
தமிழகத்தில் இன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மதுவிற்பனை செய்ய அரசு தடைவிதித்துள்ளது. அந்த உத்தரவின் படி, நேற்று திருச்சி மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.
இந்நிலையில் திருச்சி பொன்மலை அருகே கம்பி கேட் பகுதியில் உள்ள மதுபானக் கடையின் பக்கத்தில் அமரர் ஊர்தியை நிறுத்தி, அதில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதை பார்த்த மதுவிற்பனையில் ஈடுபட்ட கும்பல் அமரர் ஊர்தியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் அமரர் ஊர்தி மற்றும் அதில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மதுவிற்பனையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது விற்பனையில் ஈடுபட்ட கும்பல் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்கு, இவ்வாறு நூதன முறையில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், ரூ.150 மதிப்புள்ள மதுபாட்டில் ரூ.300-க்கும், ரூ.200 முதல் ரூ.250-க்கு விற்கப்படும் மதுபாட்டில்கள் ரூ.400 முதல் ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
English Summary
liquar bottles sale on amarurudi in trichi