திண்டுக்கல்லில் பரபரப்பு.. சீல் வைத்த டாஸ்மாக் பாரில் ஜோரான சாராய விற்பனை..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான பார்களை கலால் துறை அதிகாரிகளும், போலீசாரும் தொடர்ந்து மூடி சீல் வைத்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்களை காவல்துறையினர் தொடர்ந்து சீல் வைத்து வரும் இந்த நிலையில் போலீஸாரால் சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் பார் மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்  சின்னாளப்பட்டி அருகே பூஞ்சோலை பகுதியில் நள்ளிரவில் மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சோதனை மேற்கொண்ட சின்னாளப்பட்டி சார்பு ஆய்வாளர் கோமதி மதுபான கூட்டத்தை பூட்டி சீல் வைத்தார். இந்நிலையில் பகல் நேரத்தில் பார் ஊழியர்கள் பூட்டை திறந்து வழக்கம் போல மது விற்பனை தொடங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டாஸ்மாக் பாரை மீண்டும் பூட்டி சீல் வைத்தனர். மேலும் விற்பனையில் ஈடுபட்ட நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளனர். அரசு அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் பாரில் மீண்டும் மதுபானம் விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

liquor sales again in sealed Tasmac bar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->