விருதாச்சலத்தில் பரபரப்பு.. கோல்டன் வாட்ஸ் குவாட்டரில் 'பல்லி".. அதிர்ந்து போன மதுப்பிரியர்..!!
lizard in liquor bottle bought at Tasmac shop
சமீப காலமாக மதுவால் உயிரிழப்பு சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்து இருந்த நிலையில் நேற்று தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த இருவர் கீழஆலங்கம் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைக்கு எதிரே இருந்த பாரில் சட்டவிரோதமாக மது வாங்கிய அருந்தியதில் இருவரும் உயிரிழந்தனர்.
அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில் மது வாங்கிய அருந்தி இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம் விருத்தாச்சலத்தில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதாச்சலம் அருகே உள்ள அரசக்குழி கிராமத்தில் அரசு அனுமதி பெற்ற மதுபான கடையில் கோல்டன் வாட்ஸ் நிறுவனத்தின் 130 ரூபாய் மதிப்பிலான குவார்ட்டர் பாட்டிலை மதுப்பிரியர் 140 ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளார். அப்போது குவார்ட்டர் பாட்டிலை பரிசோதித்தபோது இறந்த நிலையில் பல்லி செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கேட்டபோது டாஸ்மாக் கடை விற்பனையாளர் மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.
English Summary
lizard in liquor bottle bought at Tasmac shop