கள்ளச்சாராய பலி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை செய்ய வேண்டும்... - பகீர் கிளப்பிய எல்.முருகன்.! - Seithipunal
Seithipunal


மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல். முருகன் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றார். அவருக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் நடந்து 2 நாட்கள் கடந்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை பார்க்க வரவில்லை. மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை. 

முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் கள்ளச்சாராய விவகாரத்தில் நேரடியாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் முத்துசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். 

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத செயலிழந்த அரசாக திமுக அரசாங்கம் இருக்கிறது. கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகள் வீடுகளில் திமுகவைச் சேர்ந்தவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை பரவி வருகிறது. திமுக அரசு மக்களை போதை பொருட்களால் அழித்துக் கொண்டிருக்கிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LMurugan interview in Nilgiri


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->