சேலம் : வனத்துறைக்கு 'தண்ணி' காட்டும் சிறுத்தையால் அச்சத்தில் மக்கள்..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி ஒன்றியத்தில் சந்நியாசி முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி, தனது வெள்ளாடு ஒன்று சுமார் 15 கிலோ எடையுள்ளதை காணவில்லை என்று தேடிய போது, அருகில் உள்ள வனப்பகுதியில் ஆட்டின் தலை மற்றும் எச்சம் மட்டும் இருப்பதை கண்டு அதிர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் அங்கு வனப்பகுதியில் நான்கு இடங்களில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர். தொடர்ந்து அந்த வனப்பகுதியில் இருந்த காலடித் தடங்களை ஆய்வு செய்த போது அங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளது உறுதிப் படுத்தப் பட்டது.

இதையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதோடு மட்டுமல்லாமல் , மூன்று இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டும் அமைத்து, தீவிரமாக சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். 

ஆனால் கடந்த ஒரு வார காலமாக எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிறுத்தை பதிவாகாததால், அந்த சிறுத்தை வேறு பகுதிக்கு சென்று விட்டதா என்ற குழப்பத்தில் வனத்துறையினர் உள்ளனர். மேலும் சில தினங்களுக்கு முன்பு சேலம் காடையாம்பட்டியிலும் ஒரு சிறுத்தை நடமாடிக் கொண்டிருந்தது. 

எனவே அங்கிருந்த சிறுத்தை தான் மேட்டூர் வந்துள்ளதா அல்லது சேலத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுகின்றவா என்றும் வனத்துறையினர் கடும் குழப்பத்தில் உள்ளனர். இதனால் மேட்டூர் சுற்று வட்டார மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Locals Feared About Leopard In Salem Mettur District


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->