#ExitPoll | தமிழகத்தில் முதலிடத்தில் திமுக! பாஜக கூட்டணி எத்தனை தொகுதிகள்? வெளியான அதிரடி கருத்து கணிப்பு!
LokSabhaElection2024 ExitPoll Tamilnadu
இந்தியாவில் 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கியதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25-ந்தேதிகளில் 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது..
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி காலை 7 மணி முதல், வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி (இன்று) மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
இந்த தடை சற்றுமுன் முடிந்த நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன.
அதன்படி இந்திய டுடே வெளியிட்டுள்ள கருத்து கணிப்பின் படி, தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி - 33-37 தொகுதிகள்
பாஜக கூட்டணி - 2-4 தொகுதிகள்
அதிமுக கூட்டணி - 0-2 தொகுதிகள்
மற்றவை - 0 தொகுதிகள்
டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு
திமுக கூட்டணி - 36-39 தொகுதிகள்
பாஜக கூட்டணி - 1-3 தொகுதிகள்
அதிமுக கூட்டணி - 0-2 தொகுதிகள்
மற்றவை - 0 தொகுதிகள்
English Summary
LokSabhaElection2024 ExitPoll Tamilnadu