குற்றாலம் மெயின் அருவியில் கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மீன்கள்.! இது தான் காரணமா.?! அதிர்ச்சியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று குற்றாலம். இது நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் போன ஊராகும். இங்கு பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி, புலி அருவி,  செண்பகாதேவி அருவி ஆகிய நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை இங்கு சீசன்  நடைபெறும்.

 இங்குள்ள அருவிகள் மலைப்பகுதியில் ஓடி நீர்வீழ்ச்சியால் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. மூலிகைகள் கலந்த செடிகளோடு நீர்வீழ்ச்சி விழுவதால்  இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. சுற்றுலாவோடு மட்டுமல்லாமல் மருத்துவ சிகிச்சைக்காகவும் குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

குற்றாலத்தில் அமைந்துள்ள மெயின் அருவி இங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் முக்கியமான ஒன்றாகும். இந்த அருவிக்கு முன்புறம் சிறிய தடாகம் ஒன்று உள்ளது. இதில் ஏராளமான மீன்கள்  இருக்கின்றன.

கடந்த சில தினங்களாக இந்த தடாகத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். வாட்டி வைக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் மீன்கள் இறந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

lot of fishes dead in a pool infront of main falls in courtallam peole got panic


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->