சென்னை டூ காரைக்கால்! 6 வருட காதலனுடன் 19 வயது மாணவி எஸ்கேப்! தந்தையின் திடீர் ட்விஸ்ட்! - Seithipunal
Seithipunal


சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் 19 வயது மகள் தீபிகா அருகில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவரை 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதாவது சென்னையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்றாக படித்த போதே இருவரும் காதலித்து வந்த நிலையில் கௌதம் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு காரைக்காலில் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்ததோடு குடும்பத்துடன் அங்கேயே செட்டில் ஆகியுள்ளார்.

இருப்பினும் இருவரும் செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். கௌதம் அடிக்கடி சென்னை வந்து தனது காதலி தீபிகாவை அவ்வப்போது சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் இருவரும் ஜோடியாக பைக்கில் சுற்றியதை அவரது பெற்றோர்கள் பார்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தீபிகாவை அவரது பெற்றோர்கள் வீட்டுக்காவலில் முடக்கியுள்ளனர். இதனால் விரத்தியின் உச்சத்திற்கு சென்ற தீபிகா காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருக்குறளை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தீபிகாவின் குடும்பத்தினை அதிர்ச்சியில் ஆழ்தியதோடு ஆத்திரமடைய செய்துள்ளது. மகளை காணவில்லை என தீபிகாவின் பெற்றோர்கள் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில்  தீபிகாவின் செல்போன் நிலை வைத்து போலீசார் அவர்கள் எடுக்கும் இடத்தை கண்டறிந்த நிலையில் தன்னை காதலனிடமிருந்து பிரித்து விடார்களோ என்ற பயத்தில் காதல் ஜோடிகள் காரைக்கால் நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்தன. இதனை அடுத்து அவர்களை பின்தொடர்ந்து வந்த காவல்துறை அதிகாரிகளிடம் வழக்கறிஞர்கள் அவர்கள் மேஜர் எனவும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியதோடு அதற்கான ஆவணங்களையும் வழங்கி உள்ளனர்.

அதனை அடுத்து கௌதம் மற்றும் தீபிகாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தான் காதலுடன் செல்ல விரும்புவதாகவும் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை எனவும் தீபிகா கூறியுள்ளார். இதனால் தீபிகாவிடமிருந்து கடிதம் எழுதி வாங்கிக் கொண்ட போலீசார் திரும்பி சென்றனர்.

இதனை அடுத்து அங்கு வந்த தீபிகாவின் தந்தை காதல் ஜோடிகளை நோக்கி காட்டமாக கேள்வி எழுப்ப காரைக்கால் நீதிமன்ற வளாகம் பரபரப்பானது. இதனால் ரோசம் அடைந்த காதலி தீபிகா தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி தந்தையிடம் கொடுத்துவிட்டு காதலனுடன் செல்வதாக கூறியுள்ளார். நகைகளை பெற்றுக் கொண்ட தீபிகாவின் தந்தை நல்லா இரு என வாழ்த்தி விட்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Love couple took refuge in Karaikal court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->