தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என்று சொன்னவர்தான் பாஜக அண்ணாமலை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு நீட்தேர்வு அவசியமில்லை என சில ஆண்டுகளுக்கு முன்பே பாஜக அண்ணாமலை கூறியிருந்தார் என அமைச்சர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா நேற்று சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கே அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது, நீட் தேர்வுக்கு பாஜக போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பார்கள். நீட் தேர்வு அவசியம் இல்லை என்று சொன்னவர்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கல்வித் திறன் அதிகம் உள்ளது என சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பேட்டியளித்திருந்தார். மேலும், மாணவர்களுக்கு கல்வி திறன் அதிகமாக உள்ளதால் நீட் தேர்வை 5 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கவும் கூறியிருந்தார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ma Subramanian speech about NEET issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->