ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை - அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி! - Seithipunal
Seithipunal


கொரோனா பெருந்தொற்று காலத்தில் செவிலியர்களின் பற்றாக்குறை காரணமாக, அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். 

இவர்களின் ஒப்பந்த பணி காலம் கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதி உடன் முடிவடைந்த நிலையில், பணிக்காலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என தமிழக அரசு அறிவித்தது. 

இதனையடுத்து, ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசியல் கட்சியினரும் செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவே, ஒப்பந்த செவிலியர்களை இன்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "செவிலியர்களுக்கு பணி நிரந்திரம் செய்ய வாய்ப்பில்லை. இதுகுறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்"  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ma Subramaniyan say about nurse job issue 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->