தன்னை எதிர்த்த பாஜகவின் ராமலிங்கமும், நாம் தமிழர் கட்சியின் கனிமொழியையும் பின்னுக்கு தள்ளிய மாதேஷ்வரன் - Seithipunal
Seithipunal


நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட விஎஸ் மாதேஷ்வரன் 29,112 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 4,62,036 வாக்குகள் பெற்று அதிமுகவின் தமிழ்மணியை இரண்டாவது இடத்திற்கு தள்ளி தோற்கடித்தார்.

மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பாஜகவின் கேபி ராமலிங்கமும், நாம் தமிழர் கட்சியின் கனிமொழியும் பெற்றனர். மாதேஷ்வரன், தமிழ்மணி மற்றும் ராமலிங்கம் இடையே வாக்கு என்னும் பனி தொடங்கியது முதல் கடும் போட்டி நிலவியது. தமிழ்மணி முதல் சுற்றில் 1,089 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார்.

ஆனால் அடுத்தடுத்த ரவுண்டிலேயே மாதேஸ்வரனுக்கு சாதகமாக போக்கு மாறியது. 10வது சுற்றில் தமிழ்மணி மாதேஸ்வரனுக்கும் வாக்கு வித்தியாசம் 15,908 ஆகவும், 12வது சுற்றில் 21,707 ஆகவும் உயர்ந்தது. அப்போதிலிருந்து இறுதிச்சுற்று வரை ஒவ்வொரு சுற்றிலும் குறைந்தது 2,000 வாக்குகள் மாதேஸ்வரனுக்கு கிடைத்தன. இரவு 9 மணி நிலவரப்படி 22வது சுற்றில் 28,704 முன்னிலை பெற்றிருந்தது.

பாஜகவின் ராமலிங்கம் சுமார் 8,500 வாக்குகள் வித்தியாசத்தில் NTK வேட்பாளர் கனிமொழியை விட முன்னேறினார். 2019 இல், KMDK இன் AKP சின்ராஜ் அதிமுக வேட்பாளர் P காளியப்பனை தோற்கடித்தார், 2014 இல் அதிமுக திமுகவை தோற்கடித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madheswaran got victory in namakkal


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->