தமிழ்நாடு மாநிலம் பற்றி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சொன்ன வார்த்தை!
MADRAS UNIVERSITY Graduation Program President Speech
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது, "சென்னை பல்கலை. மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டுள்ளது. சிறந்த தலைவர்களை சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
கல்வியை மேம்படுத்துவதில் முன்னோடியாக சென்னை பல்கலைக்கழகம் திகழ்கிறது. பாலின சமத்துவத்திற்கு சிறந்த உதாரணம் சென்னை பல்கலைக்கழகம்.
கலாச்சாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. திருக்குறள் நம்மை பல நூற்றாண்டுகளாக வழிநடத்துகிறது" என்றார்.
முன்னதாக சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தகுதியான வேலை கிடைத்த பின்னர் படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். கல்விகள் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது" என்று கூறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின்,
இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 18 நிறுவனங்கள் உள்ளன.
தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளது.
சிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இந்தியாவில் தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளது.
100 சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளில் 8 தமிழ்நாட்டில் தான் உள்ளது. 40 மருத்துவக் கல்லூரி நிறுவனங்களில் ஒன்பது தமிழ்நாட்டில் உள்ளன.
சிறந்த 30 சட்டக்கல்லூரிகளில் 8 தமிழ்நாட்டில் உள்ளது. சிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 தமிழ்நாட்டில் உள்ளது.
சிறந்த மேலாண்மை கல்லூரிகளில் 11 தமிழ்நாட்டில் தான் உள்ளது என்று, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் புள்ளி பள்ளி விவரங்களை அடுக்கி தமிழகத்தின் கல்வி சிறப்பை எடுத்துரைத்தார்.
English Summary
MADRAS UNIVERSITY Graduation Program President Speech