நாளை முதல் இறுதி விசாரணை.. கலக்கத்தில் திமுக அமைச்சர்கள்.!!
Madrashc Final hearing in DMK ministers cases
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கை விசாரித்த மாவட்ட கிழமை நீதிமன்றங்கள் அவர்கள் அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்ததோடு மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வின் முன்பு விசாரணை நடைபெற வேண்டும் என திமுக அமைச்சர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிப்பார் என அறிவித்திருந்தது.
அந்த வகையில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை விசாரித்து முடித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக வந்து விசாரிக்கும் வழக்கின் இறுதி வாதங்கள் நாளை முதல் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்குகள் வரும் மார்ச் 11ஆம் தேதிக்குள் அனைத்து வாதங்களும் முடிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிற்க்கு உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மீதான சொத்துக் குறிப்பு வழக்கில் விசாரணை தொடங்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
English Summary
Madrashc Final hearing in DMK ministers cases