நிலக்கரி தீர்ந்தால் நிலம் கொடுத்தவர்கள் மீண்டும் விவசாயத்திற்கு திரும்புவார்கள்.! - நீதிபதி கருத்து.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்எல்சி நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் என்எல்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது போராட்டம் நடத்துவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் தான் தற்பொழுது போராட்டம் நடைபெற்று வருவதாகவும் என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு படி கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யாததால் அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி, இது தொடர்பான அறிக்கையை இன்று (ஆகஸ்ட் 11) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தவறினால் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண என்எல்சி நிறுவனம் விரும்புகிறதா? அல்லது பிரச்சனையை பெரிதுப்படுத்த விரும்புகிறதா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியத்தை நியமிக்க இருப்பதாகவும், இது தொடர்பாக இரு தரப்பும் கலந்தாலோசித்து இன்று (ஆகஸ்ட் 11) நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி ஒத்தி வைத்தார்.

அதன்படி இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது என்எல்சி நிர்வாகம் தரப்பில் மத்தியஸ்தர் அமைப்பது குறித்து நிலைப்பாட்டை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. அப்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி "தொழிலாளர்கள் இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம் குறித்து மத்திய அரசு மற்றும் என்எல்சி நிர்வாகம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.

நீதிமன்றம் என்எல்சிக்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும் தான். நிலக்கரி தீர்ந்து விட்டால் நிலம் கொடுத்த தொழிலாளர் குடும்பங்கள் மீண்டும் விவசாயத்திற்கு திரும்ப தயங்க மாட்டார்கள்" என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்து இந்த வழிக்கு அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC opined the coal runs out workers family will return to agriculture


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->