அதிமுக‌ ஆட்சி ஊழலுக்கு மீண்டும் அனுமதியா? திமுக அரசு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் எண்ணூர் அணை மின் நிலையத்தில் 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைக்க ஒப்பந்தம் கோரியிருந்தது. இந்த ஒப்பந்தத்தை பிஜிஆர் நிறுவனம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது பிஜிஆர் எனர்ஜி நிறுவனம் பினாமி நிறுவனம் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை அடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தற்போதைய திமுக ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது கடன் அதிமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிப்பதற்கான காரணம் என்ன? என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதில் அளிக்க உத்தரவிட்டு ஏப்ரல்‌ 10ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc order to TNGovt response in ennore power plant tender case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->